விபத்தில் காயம் அடைந்தவருக்கு நிதி உதவி
பாவூர்சத்திரம் அருகே விபத்தில் காயம் அடைந்தவருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
பாவூர்சத்திரம்:
தென்காசி மாவட்ட போட்டோ வீடியோ நலச்சங்க உறுப்பினர் அந்தோணி. இவர் சம்பவத்தன்று நிகழ்ச்சி ஒன்றிற்கு போட்டோ எடுக்கும் பணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது தவறி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருடைய மருத்துவ செலவிற்கு உதவும் வகையில் மாவட்ட சங்கம் சார்பாக ஸ்டுடியோ நண்பர்கள் அனைவரும் இணைந்து ரூ.65 ஆயிரத்தை சங்கம் சார்பில் அவரது வீட்டிற்கு சென்று வழங்கினர்.