மின்சாரம் தாக்கி பலியான பெண்ணின் குடும்பத்துக்கு நிதி உதவி

அம்பை அருகே மின்சாரம் தாக்கி பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

Update: 2022-12-28 21:53 GMT

அம்பை:

அம்பை யூனியன் வெள்ளாங்குளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சுப்புலட்சுமி என்ற பெண் மின்சாரம் தாக்கி பலியானார். இதையடுத்து நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், பலியான பெண்ணின் குடும்பத்துக்கு தமிழக அரசின் நிவாரண நிதி கிடைக்க பரிந்துரை செய்தார். அதன்பேரில் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அம்பை யூனியன் தலைவர் பரணி சேகர், கல்லிடைக்குறிச்சி மின்வாரிய அதிகாரிகள் சுடலையாடும் பெருமாள், திருசங்கர், பிரம்ம நாயகம் ஆகியோர், சுப்புலட்சுமியின் மகன் பேச்சிமுத்து, மகள் முப்பிடாதி ஆகியோரிடம் வழங்கினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்