மீனவர் குடும்பத்திற்கு நிதி உதவி

கடலில் மூழ்கி இறந்த மீனவர் குடும்பத்திற்கு நிவேதாமுருகன் எம்.எல்.ஏ. நிதி உதவி வழங்கினார்

Update: 2023-07-28 18:45 GMT

திருவெண்காடு:

பூம்புகார் அருகே வானகிரி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 20). மீனவரான இவர் கடந்த மாதம் கடலில் மீன்பிடிக்க சென்றார். மீன்பிடித்துக்கொண்டு படகில் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் ராஜ்குமார், கடலில் மூழ்கி இறந்தார். இந்த நிலையில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ., ராஜ்குமார் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 லட்சத்தை வழங்கினார். அப்போது அவருடன் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து மகேந்திரன், ரவி, கிழக்கு ஒன்றிய செயலாளர் பஞ்சுகுமார்,திமுக பிரமுகர் ராஜா, சந்திரன், கிராம பஞ்சாயத்தார்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்