நிதி நிறுவன அதிபர் பலி

நிதி நிறுவன அதிபர் பலி

Update: 2023-02-11 10:24 GMT

வெள்ளகோவில்

வெள்ளகோவில் எல்.ேக.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 52). நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர் கடந்த மாதம் 28-ந் தேதி வெள்ளகோவில் கடைவீதியில் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது கரூரில் இருந்து காங்கயம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் மணி மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மணியை அருகில் உள்ளவர்கள் மீட்டு தனியார் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மணி இறந்தார். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

------------

Tags:    

மேலும் செய்திகள்