விழுப்புரம் மாவட்டதிட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்கலெக்டர் பழனி வெளியிட்டார்

விழுப்புரம் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் பழனி வெளியிட்டார்.

Update: 2023-05-04 18:45 GMT


விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை வாக்காளர் பதிவு அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சி.பழனி வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்காக 28 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 102 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் 108 பேரூராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 238 உறுப்பினர்கள் கொண்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட ஊராட்சி மற்றும் அனைத்து நகராட்சிகள், பேரூராட்சி அலுவலகங்களிலும் உறுப்பினர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட திட்டமிடும் குழுவிற்கு 10 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களும், நகர்ப்புறத்திற்கு (நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்) 2 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சரவணன், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, செஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம், மாவட்ட ஊராட்சிக்குழு கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்