திட்ட குழு உறுப்பினர் பதவிக்கு 16 பேர் வேட்புமனு தாக்கல்

திட்ட குழு உறுப்பினர் பதவிக்கு 16 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்

Update: 2023-06-11 18:45 GMT

சிவகங்கை மாவட்ட திட்ட குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்களிடமிருந்து கடந்த 7-ந்தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று முன்தினம் கடைசி நாளாகும். அதில் ஊரகபகுதியில் இருந்து 9 மனுக்களும், நகர்ப்புற பகுதியில் இருந்து 7 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வருகிற 12-ந் தேதி வேட்பு மனுக்கள் சரிபார்க்கப்படும். வேட்பு மனுக்களை திரும்ப பெற 14-ந் தேதி கடைசி நாளாகும்.

இந்த குழுவிற்கு மாவட்ட ஊராட்சியில் உள்ள 16 உறுப்பினர்கள், நகராட்சிகளில் உள்ள 117 வார்டு உறுப்பினர்கள் 11 பேரூராட்சி வார்டுகளில் உள்ள 167 உறுப்பினர்கள் சேர்த்து மொத்தமுள்ள 300 உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் திட்டமிடும் கமிட்டிக்கு மாவட்ட ஊராட்சியில் இருந்து 9 உறுப்பினர்களையும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இருந்து 3 உறுப்பினர்களும் சேர்த்து 12 பேரை தேர்வு செய்ய உள்ளனர்.

23-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். பிற்பகல் 3 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படும். வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கான முதல் கூட்டம் 28-ந் தேதி நடைபெறும். இத்தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்