கள நீர் பரிசோதனை பயிற்சி

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் கள நீர் பரிசோதனை குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

Update: 2023-07-27 20:00 GMT

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள கிராம குடிநீர் வடிகால் வாரிய குழு பெண் உறுப்பினர்களுக்கான கள நீர் பரிசோதனை குறித்த ஒருநாள் பயிற்சி முகாம், ஆண்டிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், 30 கிராம ஊராட்சிகளில் உள்ள 150 பெண் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முகாமில், நீர் தர பரிசோதனை, நீர் மேலாண்மை, நீரின் தன்மை மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சவுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ராமச்சந்திரன், தேனி உதவி பொறியாளர் ராஜேஷ், உதவி நிர்வாக பொறியாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம பஞ்சாயத்து மண்டல அலுவலர் விஜயலட்சுமி மற்றும் முதன்மை பயிற்றுனர் சதீஷ்குமார் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். பயிற்சியாளர் சுதாகரன் தலைமையிலான குழுவினர் கள நீர் பரிசோதனை குறித்து பயிற்சி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கடமலைக்குண்டுவை சேர்ந்த மகளிர் குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்