பீல்டு மார்ஷல் மானக் ஷா நினைவு தினம் அனுசரிப்பு
பீல்டு மார்ஷல் மானக் ஷா நினைவு தினம் அனுசரிப்பு
குன்னூர்
பீல்டு மார்ஷல் மானக் ஷாவின் 15-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஊட்டியில் உள்ள அவரது கல்லறையில், எம்.ஆர்.சி. ராணுவ மையம் மற்றும் ஸ்டேஷன் தலைமையகம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முப்படைகளின் சகோதரத்துவம் சார்பில் வெலிங்டன் ராணுவ கல்லூரி கமாண்டென்ட் லெப்டிெனன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், மானக் ஷாவின் கல்லறையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினார்கள்.