வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில் வயல் விழா

ஒழுகூர் கிராமத்தில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில் வயல் விழா நடைபெற்றது.

Update: 2022-06-08 18:29 GMT

ராணிப்பேட்டை

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில், வாேலாண்மை இயக்குனர் மலர்விழி அறிவுறுத்தலின்படி, வாலாஜா தாலுகா ஒழுகூர் கிராமத்தில் உள்ள பஜனை கோவிலில் வயல் விழா மற்றும் கிராம கூட்டம் நடந்தது. சர்க்கரை ஆலையின் நிர்வாக குழு தலைவர் எம்.ஆனந்தன் தலைமை தாங்கி பேசினார். அப்போது நவீன முறையில் சொட்டு நீர் பாசனம் அமைத்து கரும்பு சாகுபடி செய்து அதிக மகசூல் பெற ஏதுவாக அரசு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்குவதை பயன்படுத்தி சொட்டு நீர் பாசனம் அமைத்து பயன் பெறவேண்டும் என்றார்.

ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். வட்ட கரும்பு அலுவலர் சக்திவேல் வரவேற்றார். நிர்வாக குழு உறுப்பினர்கள் சேட்டு, மூர்த்தி ஆகியோர் பேசினர். கரும்பு பெருக்கு அலுவலர் வேலாயுதம், தலங்கை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ், கரும்பு பெருக்க உதவியாளர் பொன்ராம், உதவியாளர்கள் பாலாஜி, சூர்யா, வினோத், ஆர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ராணிப்பேட்டை வட்ட கரும்பு அலுவலர் சுதா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்