ரூ.20 லட்சத்தில் விழா மேடை
கெங்கநல்லூர் ஊராட்சியில் ரூ.20 லட்சத்தில் விழா மேடை அமைக்கும் பணியை எம்.எல்.ஏ. ஆய்வுசெய்தார்.
அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தி.மு.க. சார்பில் விழா நடத்துவதற்கு விழா மேடை அமைக்க நந்தகுமார் எம்.எல்.ஏ. ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். அதைத்தொடர்ந்து அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கெங்கநல்லூர் ஊராட்சியில் சந்தை கூடும் இடத்தில் விழா மேடை அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
இந்தப் பணியினை அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் நினைவாக இந்த விழா மேடை அமைப்பதாகவும், பணிகளை அடுத்த மாதம் (ஜூலை) 8-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி, மற்றும் கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.