பிளேக் மாரியம்மன் கோவில் திருவிழா

போடிச்சிப்பள்ளியில் பிளேக் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

Update: 2023-05-17 18:45 GMT

ராயக்கோட்டை

கெலமங்கலம் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், கங்கை பூஜை, கோ பூஜை, மகாதீபாராதனை நடைபெற்றது. இரவு பிளேக் மாரியம்மன், படாலம்மன், கங்காம்மாதேவி, மாரியம்மன், ஆஞ்சநேயர், ரேணுகா எல்லாம்மா தேவி, விநாயகர் ஆகிய சாமிகளுக்கு பல்லக்கு உற்சவம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆடல், பாடல் நடன நிகழ்ச்சி நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்