புனித வனத்து சின்னப்பர் திருத்தல திருவிழா

புனித வனத்து சின்னப்பர் திருத்தல திருவிழா நடைபெற்றது

Update: 2023-05-03 18:45 GMT

தேவகோட்டை

சிவகங்கை மறை மாவட்டம் புளியால் பங்கை சேர்ந்த கொடுங்காவயல் புனித வனத்து சின்னப்பர் திருத்தல 65-வது ஆண்டு திருவிழா 23-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேவகோட்டை ஆனந்தா கல்லூரி இயக்குனர் கிறிஸ்டோபர் கொடி ஏற்றி வைத்தார். பங்குத்தந்தை அகஸ்டின் தலைமையில் கிறிஸ்டோபர், பிரிட்டோ ஆகியோர் கூட்டு சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர். 9 நாட்கள் நடைபெற்ற திருவிழாவையொட்டி தினமும் திருச்செபமாலை திருப்பலி மறையும் நடைபெற்றது. 2-ந் தேதி திருவிழா சிறப்பு திருப்பலியும், சப்பரப்பவனியும் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புனித வனத்து சின்னப்பர், புனித மரியாள் புனித வனத்து அந்தோணியார் பவனி வந்தனர். ஆலயத்தை சுற்றி வந்த இந்த சப்பர பவனியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நேற்று மாலை கொடியிறக்கம் நடைபெற்றது. தொடர்ந்து திருப்பணி நிறைவேற்றப்பட்டது. அருட்பணியாளர்கள் பிரவீன், அன்பரசன் கிரகோரி, லாரன்ஸ், சூசை மைக்கேல் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றினர். இதில் அருள் சகோதரிகள் பலர் கலந்து கொண்டனர். எனது இரவு ஞானசவுந்தரி என்ற நாடகம் நடைபெற்றது. .மேலும் நேர்த்திக்கடனுக்காக பக்தர்கள் ஆயிரக்கணக்கில் ஆடு, கோழிகளை பலியிட்டனர்.

திருவிழா ஏற்பாடுகளை புளியால் பங்கு தந்தை அகஸ்டின், ஓய்வு பெற்ற தாசில்தார் மரியதாஸ் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்