மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா

ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-04-23 18:45 GMT

ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சித்திரை திருவிழா

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டது மீனாட்சி சொக்கநாதர் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். இதன்படி இந்த ஆண்டு மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 4-ந் தேதி வரை சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. விழாவின் முதல்நாளான நேற்று கோவிலின் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கியது.

பின்னர் கொடி மரத்திற்கும் மற்றும் அருகே அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்த உற்சவரான மீனாட்சி மற்றும் சொக்கநாதருக்கும் சிறப்பு தீபாராதனை, பூஜைகளும் நடைபெற்றன. கொடியேற்றம் மற்றும் பூஜைகளை மனோகர குருக்கள் மற்றும் ரமேஷ் குருக்கள் ஆகியோர் செய்தனர். கொடியேற்று நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருக்கல்யாணம்

திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக 10-வது நாளான வருகின்ற மே 2-ந் தேதி அன்று காலை 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள் மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகின்றது. திருவிழாவின் நிறைவாக வரும் மே 4-ந் தேதி அன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறுகிறது. தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடையும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான பரம்பரை தர்மகர்த்தா ராணி ராஜராஜேஸ்வரி நாச்சியார் தலைமையில் திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்