பூச்சொரிதல் திருவிழா

பூச்சொரிதல் திருவிழா நடந்தது.;

Update: 2023-04-08 18:45 GMT

பரமக்குடி, 

பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடி சேதுபதி விவேகானந்தபுரத்தில் இருளாயி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழாவையொட்டி அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பல்வேறு வகையான பூக்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு செலுத்தி வழிபட்டனர். அந்த மலர்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்