மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா

குத்தலஅள்ளி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடந்தது.

Update: 2022-08-13 16:49 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே குத்தலஅள்ளி கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து கிராமமக்கள் பொங்கல் வைத்தும், அம்மனுக்கு கூழ் ஊற்றியும், மாவிளக்கு, பூங்கரகம் எடுத்தும், ஆடு, கோழி பலியிட்டும் வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்