முதுகுளத்தூர்,
கமுதி கண்ணார்பட்டியை சேர்ந்தவா் ரேணுகாதேவி (வயது 40). உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தினத்தையொட்டி சாமி தரிசனம் செய்வதற்காக ஆட்டோவில் ரேணுகாதேவி உள்பட 5 போ் சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். தேரிருவேலி போலீஸ் நிலையம் அருகே வந்த போது எதிரே வந்த காா், ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த ரேணுகாதேவி படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தேரிருவேலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.