ஏற்காடு:-
ஏற்காடு கொண்டையனூர் பகுதியை சேர்ந்தவர் ராமர். கூலித்தொழிலாளி. இவரது மனைவி பூச்சியம்மா (வயது49). இவருக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த பூச்சியம்மாள் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.