பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-23 21:47 GMT

பொன்மலைப்பட்டி:

திருச்சி அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்தவர் விஜயலிங்கம். இவரது மனைவி ராஜகுமாரி(வயது 43). இவர் மகளிர் சுய உதவி குழு மற்றும் நிதி நிறுவனம் ஒன்றில் குடும்ப செலவிற்காக கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் கடனை திரும்ப செலுத்த இயலாததால் மனம் உடைந்த நிலையில் அவர் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராஜகுமாரி நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் இருந்தவர்கள் அதைக்கண்டு, ராஜகுமாரியை உடனடியாக மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராஜகுமாரி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விஜயலிங்கம், அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுசீலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்