பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ஆரணி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-12 17:04 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சேவூர் ஈ.பி.நகர் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் தேவி (வயது 37). இவருக்கும், சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவருக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு அபிநயா என்ற மகள் உள்ளார்.

சிவகுமார் முள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த பட்டு சேலை தயாரிப்பாளர் கோதண்டராமனிடம் வேலை செய்த போது, தேவிக்கும், கோதண்டராமனுக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி அறிந்ததும் சிவக்குமார் மனைவியை விட்டு விலகி சென்றுவிட்டார். இதனையடுத்து கோதண்டராமன், தேவியுடன் ஈ.பி.நகர் பகுதியில் குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கோதண்டராமன், தேவி வீட்டுக்கு செல்லாமலும், செலவுக்கு பணம் தராமலும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தேவி, கோதண்டராமனிடம் போனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தேவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்