தூக்குப்போட்டு பெண் தற்கொலை

நெய்க்காரப்பட்டியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-17 20:00 GMT

நெய்க்காரப்பட்டி வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். வேன் டிரைவர். இவரின் மனைவி உமாதேவி (வயது 36). இந்நிலையில் கடந்த சில நாட்களாக இவரது வீட்டில் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த உமாதேவி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பழனி தாலுகா போலீசார் அங்கு சென்று உமாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்