பெண் தூக்குப்போட்டு தற்கொலை
புதுப்பேட்டை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
புதுப்பேட்டை
புதுப்பேட்டை அருகே உள்ள திடீர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி மச்சகாந்தி (வயது 50). ஆறுமுகம் வேலைக்கு செல்லாமல் தினசரி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த மச்சகாந்தி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மச்சகாந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.