சிவகிரி:
தென்காசி மாவட்டம் சிவகிரி சிவராமலிங்கபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் திருமலைக்குமார். கூலித்தொழிலாளி. இவரது மனைவி குழலாமணி (வயது 48). இவர்களது மகன் திருப்பூரில் சமீபத்தில் விபத்தில் இறந்து விட்டார். இதிலிருந்து குழலாமணி மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலை குளியறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திராவகத்தை எடுத்து குடித்து விட்டார். இதை அறிந்ததும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.