வேப்பூர் அரசு கல்லூரியில் சேர மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
வேப்பூர் அரசு கல்லூரியில் சேர மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூரில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் இளங்கலைப் பாடப்பிரிவில் பி.ஏ.-தமிழ், பி.ஏ.-ஆங்கிலம், பி.எஸ்சி.- உயிர் தொழில்நுட்பவியல், பி.எஸ்சி-வேதியியல், பி.எஸ்சி- கணினி அறிவியல், பி.எஸ்சி-கணிதவியல், பி.எஸ்சி-இயற்பியல், பி.காம், பி.பி.ஏ. ஆகிய 9 துறைக்கான பாட பிரிவுகள் உள்ளன. இக்கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான இளங்கலை பாட பிரிவுகளுக்கான முதலாம் ஆண்டு மாணவியர் சேர்க்கைக்கு www.tngasa.in என்ற இனணயதள முகவரி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளங்கலை முதலாம் ஆண்டு மாணவியர் சேர்க்கைக்கு வருகிற 19-ந் தேதிக்குள் மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி முதல்வர் மணிமேகலை ஜெயபால் தெரிவித்து உள்ளார்.