தபால் நிலைய பெண் அதிகாரி தற்கொலை
வால்பாறையில் கிளை தபால் நிலைய பெண் அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். அதற்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வால்பாறை
வால்பாறையில் கிளை தபால் நிலைய பெண் அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். அதற்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தபால் அதிகாரி
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அப்பர்பாரளை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் ஜெயபிருந்தா(வயது 20). சிங்கோனா பகுதியில் உள்ள பெரியகல்லாறு எஸ்டேட் தபால் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கிளை தபால் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ஜெயபிருந்தா நேற்று காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். அங்கிருந்து மதியம் 2.30 மணியளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை.
தற்கொலை
இதையடுத்து சமையல் அறைக்கு சென்ற அவர், சேலை மூலம் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கு வந்த அவரது தங்கை, ஜெயபிருந்தா தூக்கில் தொங்குவதை கண்டு அக்கம்பக்கத்தினரை அழைத்தார்.
அவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெயபிருந்தா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.