மோட்டார்சைக்கிள் மோதி பெண் இன்ஸ்பெக்டர் படுகாயம்

அம்பத்தூர் டி.ஐ.வளாகம் அருகில் மோட்டார்சைக்கிள் மோதி பெண் இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-10-09 09:11 GMT

சென்னை அண்ணாநகர் 6-வது அவென்யு பகுதியை சேர்ந்தவர் வளர்மதி (வயது 48). இவர், ஆவடியில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ளார். நேற்று காலை இவர், வீட்டில் இருந்து ஆவடிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார்.

அம்பத்தூர் டி.ஐ.வளாகம் அருகில் வரும்போது அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் வளர்மதி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டார். இதில் படுகாயம் அடைந்த இன்ஸ்பெக்டர் வளர்மதியை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்