ராஜாக்கமங்கலம் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ராஜாக்கமங்கலம் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update:2023-04-13 00:39 IST

ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலம் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பட்டதாரி பெண்

ராஜாக்கமங்கலம் அருகே ராஜாக்கமங்கலம் துறை பகுதியை சேர்ந்தவர் மைக்கேல் (வயது 52), மீனவர். இவருடைய மனைவி ஷீலா, கூலி வேலைக்கு சென்று வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், இன்பான்ட் நிரோலின் (21) என்ற மகளும் இருந்தனர்.

இன்பான்ட் நிரோலின் பட்டப்படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மைக்கேல் மற்றும் ஷீலா ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர்.

தற்கொலை

வீட்டில் இன்பான்ட் நிரோலின் மட்டும் தனியாக இருந்தார். அவர் வீட்டில் உள்ள அறையில் சேலையால் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்தார். மாலையில் வீட்டுக்கு வந்த ஷீலா மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி அழுதார்். உடனே அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து இன்பான்ட் நிரோலினை கயிற்றில் இருந்து கீழே இறக்கி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, ஏற்கனவே இன்பான்ட் நிரோலின் இறந்து விட்டதாக கூறினார்கள். இதுபற்றி ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டதாரி பெண் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்