அங்கன்வாடி பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
அங்கன்வாடி பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
அம்பை:
மணிமுத்தாறு அருகே உள்ள கீழ ஏர்மாள்புரம் பலவேசக்கார தெருவைச் சேர்ந்தவர் பலவேச குமார். இவருடைய மனைவி பிரமாச்சி (வயது 35). இவர் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பலவேச குமார் இறந்து விட்டார். இதனால் பிரமாச்சி தனது குழந்தைகளுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கணவர் இறந்ததால் குழந்தைகளை எப்படி வளர்க்க போகிறோம்? என்று பிரமாச்சி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் நேற்று முன்தினம் வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், கல்லிடைக்குறிச்சி போலீசார் விரைந்து சென்று, இறந்த பிரமாச்சியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.