கடற்கரையில் பெண் பிணம்

கன்னியாகுமரி கடற்கரையில் பெண் பிணம்;

Update:2023-08-04 02:19 IST

கன்னியாகுமரி கடற்கரை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்தநிலையில் நேற்று மாலையில் கடற்கரை சுனாமி நினைவு பூங்கா அருகே 50 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் கிடந்தது. இதைப்பார்த்த சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து பிணத்தை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்