கிணற்றில் பெண் பிணம்

விருதுநகர் அருகே கிணற்றில் பெண் பிணமாக மீட்கப்பட்டாள்.

Update: 2022-09-24 20:28 GMT

விருதுநகர் அருகே உள்ள கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 49). இவரது சகோதரி உமாராணி (44). தேனி மாவட்டம் பூவநாதபுரத்தை சேர்ந்த நாகராஜன் என்பவரை திருமணம் செய்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நாகராஜன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். உமாராணி தனது மகன் பாண்டியனுடன் சகோதரர் குமாரசாமி வீட்டில் தங்கி இருந்தார். மனநலம் பாதிக்கப்பட்டிருந்த உமாராணி திடீரென வீட்டில் இருந்து மாயமானதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் குமாரசாமியின் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் உமாராணி இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினரின் உதவியுடன் உமா ராணியின் உடல் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றி குமாரசாமி கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்