கிருஷ்ணகிரி அருகே ஏரியில் பெண் பிணம்

கிருஷ்ணகிரி அருகே ஏரியில் பெண் பிணம் மிதந்தது.

Update: 2023-04-10 18:45 GMT

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகே வக்கீல் ஏரி உள்ளது. இந்த பகுதியில் நேற்று முன்தினம் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் பிணம் அழுகிய நிலையில் மிதந்தது. இது குறித்து பையனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சரவணன், கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

மேலும் செய்திகள்