சந்தன மரங்கள் வெட்டிக்கடத்தல்

கீரமங்கலத்தில் சந்தன மரங்கள் வெட்டிக்கடத்தப்பட்டது.

Update: 2022-10-10 18:44 GMT

கீரமங்கலம் ஆலடிக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 55), விவசாயி. இவர் தனது தோட்டத்தில் சந்தன மரங்களை வளர்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று நள்ளிரவில் வந்த திருடர்கள் 4 சந்தன மரங்களை எந்திரங்கள் மூலம் அறுத்து கட்டைகளை மட்டும் தூக்கிச்சென்றுள்ளனர். காலையில் தோட்டத்திற்கு சென்ற ராஜா சந்தன மரங்கள் வெட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்