கிணற்றில் தவறிவிழுந்த புள்ளிமான்குட்டி உயிருடன் மீட்பு

கங்கைகொண்டான் அருகே கிணற்றில் தவறிவிழுந்த புள்ளிமான்குட்டி உயிருடன் மீட்கப்பட்டது.

Update: 2023-03-17 18:45 GMT

கயத்தாறு:

கங்கைகொண்டான் அருகே முத்து என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த நிலையில், அருகிலுள்ள சரணாலயத்தில் இருந்து நேற்று காலையில் 2 வயது புள்ளிமான் குட்டி ஒன்று தண்ணீர் தேடி வெளியில் வந்துள்ளது. அந்த மான்குட்டி தோட்டத்திற்குள் சென்றபோது, எதிர்பாராத விதமாக அங்குள்ள 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்து முத்து அளித்த தகவலின் பேரில் வனச்சரகர் சரவணன் தலைமையில் வனக்காப்பாளர் மாரிதுரை, அழகர், வேட்டை தடுப்பு காப்பாளர் பூல்பாண்டி, வெயில்முத்து, அலுவலர்கள் உலகு, கிருஷ்ணன் ஆகியோர் அந்த தோட்டத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கிணற்றில் கயிறு கட்டி இறங்கி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த மான் குட்டியை உயிருடன் மீட்டனர். பின்னர் அந்த மான்குட்டியை கங்கைகொண்டான் காப்பு காட்டில் உள்ள புள்ளிமான்கள் சரணாலயத்தில் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்