விவசாயியை தாக்கிய தந்தை-மகன் கைது

விவசாயியை தாக்கிய தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-31 19:14 GMT

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி நடுத்தெருவை சேர்ந்தவர் பூவரசன்(வயது 55). அதே பகுதியை சேர்ந்த இவரது அண்ணன் நேரு(58). விவசாயியான இவர்கள் இருவருக்கும் இடையே பூர்வீக சொத்தை பிரித்துக் கொண்டதில் ஏற்பட்ட தகராறு சம்பந்தமாக முன்விரோதம் இருந்த வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பூவரசன் தனது வயலுக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு சென்ற நேருவுக்கும், பூவரசனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் வீட்டிற்கு வந்த நேரு தனது மகன் விவேகானந்தனுடன்(33) சேர்ந்து பூவரசன் வீட்டுக்கு சென்று, பூவரசனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனை தட்டி கேட்ட பூவரசனை நேருவும், விவேகானந்தனும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பூவரசன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் பூவரசன் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து நேரு மற்றும் விவேகானந்தன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்