சொத்து தகராறில் பெண் உள்பட 2 பேரை தாக்கிய தந்தை-மகன் கைது

சொத்து தகராறில் பெண் உள்பட 2 பேரை தாக்கிய தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-16 18:25 GMT

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணனின் மனைவி ரோஜாபதி(வயது 52). அதே ஊரில் உள்ள மேலத்தெருவை சேர்ந்தவர் சின்னதுரை(55). உறவினர்களான இவர்களுக்கு இடையே சொத்து சம்பந்தமான பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று ரோஜாபதியின் வீட்டிற்கு சென்ற சின்னத்துரை மற்றும் அவரது மகன்கள் முருகன்(29), சின்னராசு(26) ஆகிய 3 பேரும் சேர்ந்து, ரோஜாபதியிடம் சொத்தை பிரித்து தரவில்லை என்று கூறி ரோஜாபதி மற்றும் அவரது உறவினர் ரவி ஆகியோரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். வாக்குவாதம் முற்றியதில் ரோஜாபதி, ரவி ஆகியோரை சின்னத்துரை, முருகன், சின்னராசு ஆகியோர் தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ரவி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் ரோஜாபதி அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து சின்னத்துரை, சின்னராசு ஆகியோரை கைது செய்தனர். முருகனை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்