மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை-மகள் படுகாயம்
மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை-மகள் படுகாயம் அடைந்தனர்.
குளித்தலை அருகே உள்ள சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 39). இவர் சம்பவத்தன்று தனது மகள் நித்யஸ்ரீயை அய்யர்மலை பகுதியில் உள்ள பள்ளியில் சேர்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார். அய்யர்மலை கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் உள்ள திருமண மண்டபம் முன்பு சாலையில் பூசணிக்காய் கிடந்துள்ளது. அதன் மேல் மோட்டார் சைக்கிளை ஏற்றாமல் இருப்பதற்காக ஒதுங்கி சென்றுள்ளார். அப்போது அதே சாலையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் வடிவேல்-நித்யஸ்ரீ வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். பின்னர் 2 பேரும் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.