முதன்மை அமர்வு நீதிமன்றம் அமைக்கக்கோரி உண்ணாவிரதம்

கள்ளக்குறிச்சியில் வருகிற 11-ந் தேதி முதன்மை அமர்வு நீதிமன்றம் அமைக்கக்கோரி உண்ணாவிரதம் இருப்பது என வக்கீல்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-09-01 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றை விரைந்து அமைத்திட வலியுறுத்தி வக்கீல்கள் கடந்த 22-ந் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தில் வக்கீல்கள் சங்க ஆலோசனை கூட்டம் தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்கும் வரை தொடர்ந்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய வக்கீல் சங்கங்களை இணைத்து உயர்நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் வருகிற 11-ந் தேதி(திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 வரை கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் அம்பேத்கர் சிலை முன்பு வக்கீல்கள் அனைவரும் வெள்ளை நிற சீருடையில் உண்ணாவிரதம் இருப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வக்கீல்கள் செல்வநாயகம், செந்தில், பழனிவேல், ராஜேஸ்வரன் உள்பட சங்க நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்