அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதம்
அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்
சிவகங்கை
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது உள்பட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயபிரகாஷ் வரவேற்று பேசினார். மாநில தலைவர் கண்ணன் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த சங்கர சுப்பிரமணியன், வாசுகி, மிக்கேல், அம்மாள், நாச்சியப்பன், பானுமதி, பூமி ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் செல்வகுமார் நிறைவுரையாற்றினார். முடிவில் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.