புஞ்சைபுளியம்பட்டி அருகே பஸ் மோதி மெக்கானிக் பலி

புஞ்சைபுளியம்பட்டி அருகே பஸ் மோதி மெக்கானிக் பலி

Update: 2022-10-17 22:04 GMT

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள ஆலாபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 40). மெக்கானிக். இவர் நேற்று மாலை புஞ்சைபுளியம்பட்டி டானாபுதூர் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ்சானது ராம்குமாரின் மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ராம்குமார் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அறிந்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராம்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்