விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

செங்கோட்டை அருகே விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2023-03-14 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள சீவநல்லூர் கிராமத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் சார்பில் மண்வள அட்டை விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. தென்காசி மாவட்ட மத்திய மாநில திட்டங்களின் வேளாண்மை துணை இயக்குனர் (பொறுப்பு) உதயகுமார் தலைமை தாங்கி, மண் ஆய்வு செய்வதன் அவசியம் பற்றி விளக்கிக்கூறினார். தென்காசி மாவட்ட பயிர் விளைச்சல் போட்டி நடுவர் காசி பாண்டியன் முன்னிலை வகித்தார். செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக்முகைதீன் வரவேற்று, மண் ஆய்வு எவ்வாறு எடுப்பது? என்பது பற்றி எடுத்துரைத்தார்.

முகாமில் ஓய்வு பெற்ற வேளாண்மைதுறை அலுவலர் ராஜேந்திர கணேசன், அட்மா திட்டத்தின் தென்காசி வட்டார மேலாளர் சங்கரநாராயணன் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு சாகுபடி செய்யும் முன்னரே வயல்வெளியில் மண் மாதிரி எடுத்து பரிந்துரைப்படி உரம் இடுதல் பற்றிய பயிற்சி நடைபெற்றது. உதவி வேளாண்மை அலுவலர் அருணாசலம் நன்றி கூறினார். முன்னோடி விவசாயிகள் அருள் பிரகாசி, அருணாசலம் உள்ளிட்ட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்