விவசாய தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

விவசாய தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-07-25 19:49 GMT

கிராம ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று பேரூராட்சிகளிலும் வருவாய் கிடைக்காமல் அவதிப்படும் ஏழை, எளிய மக்களுக்கு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நேற்று மண்ணச்சநல்லூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சங்கர், மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.முடிவில் பேரூராட்சி செயல்அலுவலர் சின்னச்சாமியிடம் கோரிக்கை மனுக்களை அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்