ஆத்மா திட்டத்தில் விவசாயிகள் சுற்றுலா
மேற்கு ஆரணி வட்டாரத்தில் ஆத்மா திட்டத்தில் விவசாயிகள் சுற்றுலா சென்றனர்.
ஆரணி
மேற்கு ஆரணி வட்டாரத்தில் வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் ஆத்மா திட்டத்தின் சார்பாக மேற்கு ஆரணி, செய்யாறு மற்றும் கீழ்பென்னாத்தூர் வட்டாரங்களை சேர்ந்த 20 விவசாயிகள் கர்நாடகா மாநிலத்துக்கு சுற்றுலா சென்று வந்தனர்.
இந்த கண்டுநர் சுற்றுலா துல்லிய பண்ணையம் தலைப்பில் அளிக்கப்பட்டது.
இச்சுற்றுலாவில் கரும்பு பயிரைத் தாக்கும் நோய்கள், பூச்சிகள், நீர் மேலாண்மை, அறுவடைக்கு பின் நேர்த்தி தொழில்நுட்பம், தேவையான ஊட்டச்சத்து பற்றி தெளிவாக விளக்கப்பட்டது.. வயல் வெளி பயிற்சியும் அளிக்கப்பட்டது.
வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செல்லதுரை மேற்பார்வையில் வட்டார வேளாண்மை அலுவலர் கீதா, வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ்குமார் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் பிரேம்குமார் ஆகியோர் 20 விவசாயிகளை ஒருங்கிணைத்து சுற்றுலாவுக்கு அழைத்து சென்று வந்தனர்.