அறுவடை செய்த நெல்லை சாலையில் கொட்டி காய வைக்கும் விவசாயிகள்

கொரடாச்சேரியில் பெய்த தொடர் மழையால் அறுவடை செய்த நெல்லை சாலையில் கொட்டி காயவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். மேலும் 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-11 18:44 GMT

கொரடாச்சேரி:

கொரடாச்சேரியில் பெய்த தொடர் மழையால் அறுவடை செய்த நெல்லை சாலையில் கொட்டி காயவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். மேலும் 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லில் ஈரப்பதம்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடை நிலையில் இருந்த குறுவை நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன. இந்நிலையில் தொடர்ந்து அறுவடை நடைபெற்று வருகிறது. மழை காரணமாக அறுவடை செய்யப்படும் நெல்லில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. ஈரப்பதத்தை நீக்கும் வகையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை சாலைகளில் கொட்டி காயவைத்து வருகின்றனர். இருப்பினும் அவ்வப்ேபாது திடீரென பெய்யும் மழையால் நெல்லை காய வைக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

கொள்முதல்

நெல்லில் ஈரப்பதம் அதிகரித்து வருவதால், அதே ஈரப்பதத்துடன் கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீத ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதை 22 சதவீதமாக அதிகரித்து தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில் சம்பா சாகுபடிக்கு இந்த மழை பயனுள்ளதாக உள்ளதால் விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்