விற்பனையாகாத புதினாவை சாலையில் வீசி சென்ற விவசாயிகள்

திருப்பத்தூர் பகுதியில் விற்பனையாகாத புதினாவை சாலையில் விவசாயிகள் வீசி சென்றனர்.

Update: 2023-02-25 17:47 GMT

திருப்பத்தூரரை சுற்றி 70-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் கருவேப்பிலை, புதினா, கொத்தமல்லி ஆகியவை அதிகமாக பயிரிடப்படுகிறது. மேலும் திருப்பத்தூரில் இருந்து வேலூர், சென்னை, ஓசூர், பெங்களூரு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்தநிலையில் திருப்பத்தூர் சுற்றுப்பகுதியில் தொடர்ந்து புதினா விலை குறைவாக வாங்கப்படுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில், திருப்பத்தூர்-திருவண்ணாமலை பிரதான சாலையில் வெங்களாபுரம் எனும் பகுதியில் இன்று வி்ற்பனையாகாத புதினா கட்டுகளை விவசாயிகள் சாலையில் வீசி சென்றனர்.

கஷ்டப்பட்டு இரவு பகலாக பயிரிட்டும் போதிய விலை கிடைக்காத காரணத்தால் விற்பனை ஆகாத புதினா கட்டுக்களை விவசாயிகள் சாலையில் வீசிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்