பாசனத்துக்கு நீர் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு

நங்காஞ்சியார் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டும் பாசனத்துக்கு நீர் கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

Update: 2023-05-10 19:00 GMT


ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டையில் நங்காஞ்சியாறு அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 39.37 அடி ஆகும். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தற்போது அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து அணையில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த மாதம் 9-ந் தேதி முதல் 40 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.


இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் இடையக்கோட்டை, வலையபட்டி, சின்னக்காம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்து 615 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதேபோல் கரூர் மாவட்டத்தில் சேந்தமங்கலம் பகுதியில் 3 ஆயிரத்து 635 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.


இந்த நிலையில் வரத்து வாய்க்கால் சீரமைக்கப்படாமல் உள்ளதால் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவில் உள்ள குரிக்காரன்வலசு, குரும்பப்பட்டி ஆகிய பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பவில்லை. இதனால் கரூர் மாவட்ட விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்