தேங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்
தேங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்
பொள்ளாச்சி
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும், கள்ளுக்கான தடையை உடனடியாக நீக்க வேண்டும், கொப்பரை தேங்காய் விலையை ரூ.140 ஆக நிர்ணயிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி பல்லடம் ரோட்டில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி இணைந்து நேற்று தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தினர். அப்போது தேங்காய்களை ரோட்டில் உடைத்த விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷம் எழுப்பினர். இதில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.