உரங்களுடன் இணை இடுபொருட்களை வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்த கூடாது

உரங்களுடன் இணை இடுபொருட்களை வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்த கூடாது என தனியார் உர விற்பனையாளர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-07-31 18:54 GMT

கள்ளக்குறிச்சி, 

.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி பருத்தி, மக்காச்சோளம், நெல், கம்பு போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இதையொட்டி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் யூரியா 1,189 மெட்ரிக்டன், டி.ஏ.பி. 939 மெட்ரிக்டன், பொட்டாஷ் 1,421 மெட்ரிக்டன், சூப்பர் பாஸ்பேட் 889 மெட்ரிக்டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 5,362 மெட்ரிக்டன் அளவுக்கு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாய பயள்பாட்டுக்காக விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

.தனியார் உர விற்பனையாளர்கள் அரசு நிர்ணயித்த விலைக்கு உரங்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். ரசாயன உரங்களின் இருப்பு மற்றும் அதிகபட்ச சில்லரை விலைப்பட்டியல் விவரங்களை விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையில், தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும். விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக உரங்களுடன் இணை இடுபொருட்களை வாங்க அவர்களை கட்டாயப்படுத்த கூடாது.

நடவடிக்கை

உர விற்பனையாளர்கள் உரங்களை விற்பனை செய்யும் போது விற்பனை பட்டியலை உடன் வழங்கிட வேண்டும். மேற்கண்ட அரசு விதிகளை மீறும் உர விற்பனையாளர்கள் மீது உரச்சட்டத்தின் அடிப்படையில் 1985-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் கடையின் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்