சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
கபிஸ்தலம் அருகே சர்க்கரை ஆலை முன்பு பாடை கட்டி ஒப்பாாி வைத்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சட்டை அணியாமல் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கபிஸ்தலம்;
கபிஸ்தலம் அருகே சர்க்கரை ஆலை முன்பு பாடை கட்டி ஒப்பாாி வைத்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சட்டை அணியாமல் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சர்க்கரை ஆலை
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடியில் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்பை அரவைக்கு அனுப்பி வைத்தனர்.இவ்வாறு அனுப்பிய கரும்புக்கு பணத்தை தராமல் ஆலை நிர்வாகம் நிலுவையில் வைத்துள்ளது. மேலும் பல்வேறு விவசாயிகள் பெயரில் பல்வேறு வங்கிகளில் ரூ.300 கோடி கடன் பெற்றது. இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சர்க்கரை ஆலை மூடப்பட்டது.
பாடை கட்டி போராட்டம்
மூடப்பட்ட சர்க்கரை ஆலையை ஒரு நிறுவனம் விலைக்கு வாங்கியது. இந்த நிறுவனம் சீரமைப்பு பணிகளை தொடங்கியபோது அதனை கரும்பு விவசாயிகள் தடுத்து நிறுத்தியதுடன் தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு பணியை தொடருமாறு தெரிவித்தனர்.இந்த நிலையில் தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கால தாமதம் இன்றி உடனே வழங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் நேற்று 4-வது நாளாக ஆலை முன்பு பாடை கட்டி தூக்குவது போன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பெண்கள் ஒப்பாரி வைத்தனர்.
சட்ைட அணியாமல்
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் தங்க காசிநாதன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, நாக.முருகேசன், ராஜேந்திரன் மற்றும் விவசாயிகள் சட்டை அணியாமல் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.சம்பவ இடத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி தலைமையில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி மற்றும் திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.