அரிவாள்மூக்கு திட்டத்தை விரைந்து நிறைவேற்றுவதுடன்நவரை சாகுபடி செய்ய உதவிட வேண்டும்கலெக்டரிடம், விவசாயிகள் மனு

அரிவாள்மூக்கு திட்டத்தை விரைந்து நிறைவேற்றுவதுடன் நவரை சாகுபடி செய்ய உதவிட வேண்டும் என கலெக்டரிடம், விவசாயிகள் மனு கொடுத்துள்ளனர்.;

Update:2023-01-05 00:15 IST


பெருமாள் ஏரி நீர்ப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் செயலாளர் சண்முகம் தலைமையில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடலூர் மாவட்டத்தை வெள்ள பாதிப்பில் இருந்து காக்க உருவாக்கப்பட்ட அரிவாள்மூக்கு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். மேலும் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெருமாள் ஏரியை தூர்வார ரூ.119 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் முதல் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் 30 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது தூர்வாரும் பணிகள் நடக்கவில்லை. மேலும் மதிப்பீட்டில் உள்ளபடி எந்தவொரு இடத்திலும் 2 மீட்டர் ஆழம் எடுக்கப்படவில்லை. அதனால் ஏரியை தூர்வாருவதை கண்காணிக்க ஒரு அதிகாரப்பூர்வ குழுவை அமைக்க வேண்டும். இதுதவிர டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை உள்ள காலத்தில் மழை மற்றும் ஊற்று எடுத்து தண்ணீர் ஓடும் என்பதால் ஏரியில் லாரிகள் மூலம் வேலை செய்ய முடியாது. அதனால் அந்த காலத்தை வீணாக்காமல் நவரை சாகுபடி செய்ய உதவிட வேண்டும். ஏற்கனவே குருவை சாகுபடி இல்லாத நிலையில், நவரையும் சாகுபடி இல்லாவிட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் சிதைந்து போகும். அதனால் நவரை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு உதவிபுரிய வேண்டும். மேலும் பெருமாள் ஏரியில் விவசாயிகள் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்