குதிரையாலாம்பாளையத்தில் அக்ரி ஸ்டாக் திட்டத்தில் பதிவு செய்ய விவசாயிகள் ஆர்வம்
குதிரையாலாம்பாளையத்தில் அக்ரி ஸ்டாக் திட்டத்தில் பதிவு செய்ய விவசாயிகள் ஆர்வம்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குதிரையாலாம்பாளையம் வருவாய் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலக அக்ரி ஸ்டாக் திட்ட விவசாயிகள் பதிவேற்றம் செய்ய சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் விவசாயிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு மனுக்களை வழங்கினார்கள். இதில் கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முத்துலட்சுமி கலந்துகொண்டு விவசாயிகளிடமிருந்து மனுக்களை பெற்றார். முகாமில் 60 மனுக்கள் பெறப்பட்டது. இதில் கிணத்துக்கடவு வேளாண்மை உதவி இயக்குனர் ஆனந்தகுமார், துணை வேளாண்மை அலுவலர் மோகணசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.