பொதுப்பணித்துறை ஏரிகளை மீன்பிடி குத்தகைக்கு விடக்கூடாது குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

பொதுப்பணித்துறை ஏரிகளில் மீன்பிடிக்க குத்தகைதாரர்கள் தண்ணீரை வீணாக வெளியேற்றுவதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே ஏரிகளை மீன்பிடி குத்தகைக்கு விடக்கூடாது என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2022-10-18 18:45 GMT

சோளிங்கர்

பொதுப்பணித்துறை ஏரிகளில் மீன்பிடிக்க குத்தகைதாரர்கள் தண்ணீரை வீணாக வெளியேற்றுவதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே ஏரிகளை மீன்பிடி குத்தகைக்கு விடக்கூடாது என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

கூட்டம்

சோளிங்கரில் தாலுகா அளவிலான விவசாயிகள் கூட்டம் தாசில்தார் கணேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், சோளிங்கர் தாலுகாவுக்குட்பட்ட ஏரிகளுக்கு பொன்னை ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவர இணைப்பு கால்வாய் அமைத்து தர வேண்டும்.

ஏரிகளில் மீன் வளர்க்க பொதுப்பணித்துறை ஏலம் விடுவதால் குத்தகைதாரர்கள் மீன் பிடிப்பதை குறிக்கோளாக கொண்டு தண்ணீரை கால்வாய்கள் வழியாக வெளியேற்றுகின்றனர்.

இதனால் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் வறண்டு போகிறது நிலத்தடி நீர் மட்டுமே குறைகிறது வளர்ச்சி காலங்களில் பெரிதும் பாதிக்கப்படும் எனவே மீன் வளர்க்க பொதுப்பணித்துறை ஏலம் விடக்கூடாது.

சீரக சம்பா நெல்

கார்த்திகை பட்டத்தில் சீரக சம்பா ரக நெல் பயிரிட விவசாயிகள் முன் வந்த நிலையில் வேளாண்மை அலுவலகத்தில் சீரக சம்பா நெல் விதை இருப்பு இல்லை என்கின்றனர். எனவே தாலுகா அளவில் விவசாய விதை மையம் அமைக்க வேண்டும்.

ஏரியில் மழை நீரை சேமிக்கும் விதமாக ஏரி கால்வாய்களை முழுமையாக தூர்வர வேண்டும், விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் வேளாண்மை துறை தோட்டக்கலை துறை எப்போதும் விதைகளை இருப்பு வைத்திருக்க வேண்டும்,

சோமசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்பட்டு கிராமத்தில் ஏரி அருகே உள்ள ஓடைக்கால்வாய்யில் மழைநீர் வெளியேறி வருகிறது. கிராமத்திற்கு பயண்படும் குடிநீர் ஆய்வுகளை கிணறு உள்ளது. விவசாய விளைநிலங்கள் உள்ளது கால்நடை களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் இந்த ஓடைக்கால்வாயில் வீணாக வெளியேறி வரும் மழை நீரை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் தடுப்பணை கட்ட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்தனர்.

செல்போன் பார்த்த அதிகாரி

அப்போது தாசில்தார் கணேசன் கோரிக்கைகளை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக அவரது செல்போனை பார்த்துக் கொண்டிருந்தததாக விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்